உள்ளூர் வியாபாரங்களுக்கான டெலிவரி தளம்

உங்கள் ஆர்டர்களை Quika டெலிவரி செய்யும்.

உங்கள் சொந்த வெப்சைட்டிலிருந்து ஆர்டர்களை அனுப்புங்கள், கம்பெனி ஆப்பில் புக் செய்யுங்கள், அல்லது Quika ஆப்பில் விற்பனை செய்யுங்கள். எங்கள் கேப்டன்கள் உடனடியாக, நீங்கள் சொல்லும் நேரத்தில், அல்லது கூரியராக டெலிவரி செய்வார்கள்.

Everything Delivered.

ஆர்டர் Q-24817 பிக்அப்இப்போது
  1. எடுக்கும் இடம்உங்கள் கடை, அண்ணா நகர்
  2. டெலிவரி இடம்உங்கள் வாடிக்கையாளர், கே.கே. நகர்
  1. ஆர்டர் ஆனது
  2. கேப்டன் கடையில்
  3. வழியில்
  4. டெலிவரி ஆனது
ஆர்டர் ஆனது OTP 4 7 2 9
யாருக்காக

டெலிவரி செய்யும் எல்லா வியாபாரங்களுக்கும்

ஒரே அக்கவுண்டில் உங்கள் எல்லா கிளைகளும்; ஒவ்வொரு ஆர்டரும் அதற்கேற்ற வகையில் போகும்.

  • ரெஸ்டாரன்ட்கள், கிளவுட் கிச்சன்கள்ஒவ்வொரு கிளையிலிருந்தும் சூடான சாப்பாடு; கேட்டரிங் குறித்த நேரத்தில்.
  • மளிகை, சூப்பர்மார்க்கெட்தினசரி ஆர்டர்கள் உடனே; பெரிய ஆர்டர்கள் குறித்த நேரத்தில்.
  • மருந்துக் கடைகள்வாடிக்கையாளர் காத்திருக்கும் மருந்துகள், OTP உறுதியுடன்.
  • பேக்கரி, ஸ்வீட் கடைகள்முன்பதிவு ஆர்டர்கள், கேக்குகள் நீங்கள் சொல்லும் நேரத்தில்.
  • D2C, ரீடெயில் பிராண்டுகள்உங்கள் வெப்சைட் செக்அவுட்டிலிருந்து API வழியாக நேரடியாக ஆர்டர்கள்.
  • பார்சல்கள், டாக்குமெண்ட்கள்அவசரமில்லாதவற்றுக்கு Courier வகை.
Quika-வை பயன்படுத்த மூன்று வழிகள்

உங்கள் வியாபாரம் இப்போது நடக்கும் விதத்திலேயே டெலிவரி அனுப்புங்கள்

ஒன்றையோ மூன்றையுமோ பயன்படுத்தலாம். எல்லா ஆர்டர்களும் அதே கேப்டன்களிடம் போகும்; எல்லாவற்றையும் ஒரே மாதிரி ட்ராக் செய்யலாம்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை இணையுங்கள்

சொந்த வெப்சைட் அல்லது ஆப் உள்ள வியாபாரங்களுக்கு

  • உங்கள் checkout-இலிருந்து ஆர்டர் எங்கள் API வழியாக நேரடியாக Quika-வுக்கு வரும். கையால் புக் செய்ய வேண்டியதில்லை.
  • ஒரே பிக்அப்பிலிருந்து பல இடங்களுக்கு ஒரே ட்ரிப்பில் டெலிவரி செய்யலாம்.
  • ஆர்டர் நகர நகர, அதன் நிலவரம் உங்கள் சிஸ்டத்துக்கு தானாக வரும்.
  • வாடிக்கையாளர் OTP சொல்லி பொருளைப் பெற்றதை உறுதி செய்வார்.
API அணுகல் கேளுங்கள்

கம்பெனி ஆப்பில் புக் செய்யுங்கள்

போன் அல்லது WhatsApp-இல் ஆர்டர் எடுக்கும் கடைகள், கிச்சன்கள், செயின்களுக்கு

  • பிக்அப், டெலிவரி இடங்களைக் கொடுத்து டெலிவரி வகையைத் தேர்ந்தெடுங்கள்; கேப்டன் ஒதுக்கப்படுவார்.
  • உங்கள் எல்லா கிளைகளையும் ஒரே கம்பெனி அக்கவுண்டில் நடத்துங்கள்.
  • எல்லா ஆர்டர்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம், export செய்யலாம், பில்களை சரிபார்க்கலாம்.
உங்கள் வியாபாரத்தை பதிவு செய்யுங்கள்

Quika ஆப்பில் விற்பனை செய்யுங்கள்

புதிய வாடிக்கையாளர்கள் வேண்டும் கடைகள், ஹோட்டல்களுக்கு

  • உங்கள் கடையையும் மெனுவையும் Quika ஆப்பில் லிஸ்ட் செய்யுங்கள்.
  • விலை, ஸ்டாக், திறக்கும் நேரம் எல்லாவற்றையும் நீங்களே முடிவு செய்யலாம்.
  • வாடிக்கையாளர் ஆன்லைனிலோ கேஷ் ஆன் டெலிவரியிலோ பணம் செலுத்தலாம்; Quika டெலிவரி செய்யும்.
உங்கள் கடையை லிஸ்ட் செய்யுங்கள்
டெலிவரி வகைகள்

ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு வகையைத் தேர்ந்தெடுங்கள்

நீங்கள் உறுதி செய்வதற்கு முன்பே, தூரத்துக்கேற்ற டெலிவரி கட்டணம் கணக்கிட்டுக் காட்டப்படும்.

Instant

ஆர்டர் வந்தவுடனே கேப்டன் ஒதுக்கப்படுவார்; நேராக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பார்.

சாப்பாடு, மளிகை, மருந்து — வாடிக்கையாளர் காத்திருக்கும் எதுவும்.

Scheduled

தேதியையும் நேரத்தையும் நீங்கள் சொல்லுங்கள்; அந்த நேரத்தில் அனுப்புவோம்.

முன்பதிவு ஆர்டர்கள், கேட்டரிங், திட்டமிட்ட ரீஸ்டாக், குறிப்பிட்ட நேர டெலிவரிகள்.

Courier

உடனே இல்லாமல், கூரியர் நேரக்கணக்கில் எடுத்து டெலிவரி செய்யப்படும்.

ஒரு மணி நேரத்துக்குள் போய்ச் சேர வேண்டிய அவசியமில்லாத பார்சல்கள், டாக்குமெண்ட்கள்.

டெலிவரி எப்படி நடக்கிறது

ஆர்டர் முதல் வீட்டு வாசல் வரை, முழுவதும் ட்ராக் செய்யலாம்

  1. ஆர்டர் வருகிறது

    உங்கள் வெப்சைட், கம்பெனி ஆப் அல்லது Quika ஆப்பிலிருந்து.

  2. கேப்டன் எடுக்கிறார்

    அருகில் இருக்கும் கேப்டன் ஆர்டரை ஏற்று உங்கள் கடைக்கு வருவார்.

  3. வழியில்

    நீங்களும் உங்கள் வாடிக்கையாளரும் கேப்டனை லைவ்-ஆக ட்ராக் செய்யலாம்.

  4. OTP உடன் டெலிவரி

    வாசலில் வாடிக்கையாளர் OTP சொன்னால்தான் டெலிவரி உறுதியாகும்.

Quika ஆப்பில் லைவ் ட்ராக்கிங் திரை, வரைபடத்தில் கேப்டனின் வழி
உங்கள் வியாபாரத்தை பதிவு செய்யுங்கள்

Quika-வுடன் டெலிவரியைத் தொடங்குங்கள்

Quika கம்பெனி போர்ட்டலில் சில நிமிடங்களில் பதிவு செய்யலாம். யாரையும் அழைக்க வேண்டியதில்லை.

API அணுகல் வேண்டுமா, அல்லது முதலில் பேச வேண்டுமா? 99406 50963 என்ற எண்ணில் அழையுங்கள், அல்லது support@quika.in-க்கு எழுதுங்கள்.

  1. உங்கள் மொபைல் எண்ணைக் கொடுங்கள். உங்கள் வியாபாரம் ஏற்கனவே பதிவாகியுள்ளதா என்று போர்ட்டல் பார்க்கும்.
  2. வியாபார விவரங்களைச் சேர்க்கவும். வியாபார வகை, GSTIN, வங்கி விவரங்களைக் கொடுத்து, விதிமுறைகளை ஏற்று, OTP மூலம் உங்கள் எண்ணைச் சரிபார்க்கவும்.
  3. உங்கள் அக்கவுண்டை நாங்கள் அங்கீகரிப்போம். பிறகு உங்கள் கிளைகளைச் சேர்த்து, முதல் டெலிவரியை புக் செய்யுங்கள்.
Quika ஆப்ஸ்

உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் கேப்டன்களுக்கும்

மூன்று Quika ஆப் திரைகள்: ஹோம், பிக்அப், லைவ் மேப்

Quika, வாடிக்கையாளர்களுக்கு

அருகிலுள்ள கடைகள், ஹோட்டல்களில் ஆர்டர் செய்யுங்கள், அல்லது ஊருக்குள் பார்சல் அனுப்புங்கள். லைவ்-ஆக ட்ராக் செய்யலாம்; ஆன்லைனிலோ கேஷ் ஆன் டெலிவரியிலோ பணம் செலுத்தலாம்.

Download on the App Store Get it on Google Play

Quika Captain, டெலிவரி பார்ட்னர்களுக்கு

உங்கள் சொந்த பைக்கில், உங்களுக்கு வசதியான நேரத்தில் Quika-வுடன் டெலிவரி செய்யுங்கள். அருகிலுள்ள ஆர்டர்களை ஏற்று, ஒவ்வொரு ட்ரிப்புக்குமான வருமானத்தைப் பார்க்கலாம்.

Get Quika Captain on Google Play
கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வேறு ஏதாவது? 99406 50963-ல் அழையுங்கள், அல்லது support@quika.in-க்கு எழுதுங்கள்.

ஒரு டெலிவரிக்கு எவ்வளவு கட்டணம்?

தூரம், டெலிவரி வகை இரண்டையும் வைத்து கட்டணம் கணக்கிடப்படும்; ஆர்டரை உறுதி செய்வதற்கு முன்பே அது உங்களுக்குத் தெரியும். உங்கள் ஆர்டர் அளவு, தூரங்களைப் பொறுத்து உங்கள் ரேட் சொல்லப்படும். விலை அறிய எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Quika எங்கே டெலிவரி செய்கிறது?

Quika தற்போது மதுரையில் இயங்குகிறது; சென்னையில் எங்கள் அலுவலகம் உள்ளது. வேறு ஊரில் டெலிவரி வேண்டுமென்றால் எங்களிடம் சொல்லுங்கள்.

தொடங்க டெக் டீம் தேவையா?

தேவையில்லை. கம்பெனி போர்ட்டலில் பதிவு செய்து, முதல் நாளிலிருந்தே கம்பெனி ஆப்பில் டெலிவரிகளை புக் செய்யலாம். உங்கள் டீம் தயாரானதும் API-ஐச் சேர்க்கலாம்.

என் வியாபாரத்தை எப்படிப் பதிவு செய்வது?

company.quika.in-க்குச் சென்று மொபைல் எண்ணைக் கொடுங்கள்; வியாபார விவரங்கள், GSTIN, வங்கி விவரங்களைச் சேர்த்து, விதிமுறைகளை ஏற்று, OTP மூலம் சரிபார்க்கவும். Quika உங்கள் அக்கவுண்டை அங்கீகரித்த பிறகு கிளைகளைச் சேர்க்கலாம்.

சரியான நபரிடம் சேர்ந்தது என்று எப்படித் தெரியும்?

வாசலில் வாடிக்கையாளர் OTP-ஐச் சொல்வார். கேப்டன் சரியான OTP-ஐ உள்ளிட்டால் மட்டுமே ஆர்டர் டெலிவரி ஆனதாகக் குறிக்கப்படும்.

ஒரே கேப்டன் பல ஆர்டர்களை எடுத்துச் செல்ல முடியுமா?

முடியும். ஒரே பிக்அப்பிலிருந்து ஒரே ட்ரிப்பில் பல இடங்களுக்கு டெலிவரி செய்யலாம்; ஒவ்வொன்றையும் ட்ராக் செய்யலாம்.

API அணுகல் எப்படிப் பெறுவது?

உங்கள் கம்பெனி அக்கவுண்ட் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, கேட்டால் API அணுகல் தரப்படும். support@quika.in-க்கு எழுதுங்கள் அல்லது 99406 50963-ல் அழையுங்கள்.

வாடிக்கையாளர்கள் கேஷ் ஆன் டெலிவரி செய்யலாமா?

Quika ஆப்பில், வாடிக்கையாளர்கள் PhonePe மூலம் ஆன்லைனிலோ, கேஷ் ஆன் டெலிவரியாகவோ பணம் செலுத்தலாம்.

Quika கேப்டனாக எப்படிச் சேர்வது?

Google Play-லிருந்து Quika Captain ஆப்பை டவுன்லோட் செய்து, அதிலேயே பதிவு செய்யுங்கள்.

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

99406 50963
98421 50963
support@quika.in

மதுரை

230, LIG Colony, KK Nagar
Madurai 625020

சென்னை

9, Arun Flats, 2nd Floor
Ashok Nagar 1st Street, 2nd Avenue
Ashok Nagar, Chennai 600083